பகலில் வந்த நிலவாய்
மக்கள் மனசு குளிர
கோடை மழை கொட்டட்டுமே..!
தாயைத் தேடும் குஞ்சைப்போல
கோடை மழையைத் தேடி
நித்தம் நித்தம் தவிக்கிறது
நிலமகள்..!
உலையில் கொதிக்கும்
அரிசி போல
உயிரினங்கள் வெயிலில் தவிக்க..
பொழிவிழந்த இழந்த சிற்பம் போல
ஆறு ஏரி கிடக்குதே..!
பருவ மழையும்
பொய்த்துப் போக
பாலுக்கு அழும் பிள்ளையாய்
கோடை மழைக்கு
மனசு தவிக்கிறதே..!
மாதம் மும்மாரி
பெய்ததெல்லாம்
வரலாறாய் போக..
ஒரு பொழுது பெய்றதே
சரித்திரமாய் போனதே..!
கோடை மழையே -நீ
சுட்டெரிக்கும் வெயிலுக்கு
சூடு தணிக்க வாராயோ..?
சுகமாய் உயிர்கள் வாழ
வான் மேகமே- நீ
கருணை நீரை பொழிவாயே..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.