நினைவுப் பெட்டகம் -2017: பி.பிரசாத்

Published on
Updated on
1 min read
தலைவன் இல்லாமல்...இளைஞர்கள் போராட்டம் !தண்ணீர் அலையாடும்மெரினாவின் கடலோரம்...பன்னீர் (கண்) நீரோட்டம் !தீர்ப்பொன்று வந்ததினால்ஒரு கும்பல் கொண்டாட்டம்...!மற்றொன்று சிறைவாசம்...திண்டாட்டம்..!சினிமா பிரபலங்கள்ஆபாசம், அந்தரங்கம்...ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் திசைஎட்டும்..!நீரில்லை, சோறில்லைஎனும்வறட்சி ஒருபக்கம்...!'ஊரில்லை' எனுமளவுஉலுக்கிவைக்க வந்ததொருஒக்கி புயல் மறுபக்கம் !ஆண்டினையேஆண்ட படை ஒன்றில்லை இரண்டாகும்..'பாகுபலி' அவன்படையும், ஓவியாவின் ஆர்மியதும் !ஒருநாடு..ஒரு வரியாம்..என்றிங்கே புது சட்டம் !ஒரு வரியில் சொல்வதெனில்புரட்சிமிகு பெருமாற்றம் !நீட் தேர்வு என்பதற்கு'டிமிக்கி' கொடு-எனக்கோறிபோராட்டம் ! ஏமாற்றம் ! பாட்டு தேர்வென்றால்..'ஜிமிக்கி' கம்மல் குத்தாட்டம் !அசைவாய் நடைபழகிஉலகின் அழகியென‌நம்மவரின் ஒயிலாட்டம் !இசையை வளர்ப்பதிலேநம்ஊரே குயிலாட்டம் !நாமெல்லாம் குயில் கூட்டம் !முடியும் இவ்வாண்டுநினைவெல்லாம் அலையாட்டம்..நெஞ்சில் அதுஆட ...கனிவோடு வரவேற்போம்..!வருமோர் புத்தாண்டை...ஆண்டவனின் அருள்வேண்டி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com