கனிவுடனும் பொறுப்புடனும் கருத்துடனும் செயல்படும்நல்புனிதநன் நாடென்றிதைப் போற்றுகிறார்!---இனியென்றும்,எங்குமே வறுமையது இன்னாட்டில் இல்லையெனும்மங்கலமே எனைநனைத்த மழை!நாடின்றோர் வல்லரசென நம்மைபிறர் போற்றுகிறார்கோடிகோடி மக்கள்நாம் கொண்டாட!---நாடின்றுதுலக்கமதை பலப்பலத் துறைகளிலும் கண்டமறுமலர்ச்சியதே எனைநனைத்த மழை!இன்னாட்டின் வளர்ச்சியதும் ஏற்றமுறக் கண்டதெலாம்மன்மோகன் ஆட்சிதனின் மகிமையால்!---முன்னமதாய்,வீட்சிகண்ட நிதிநிலைமை வீருகொண்டு எழுச்சியுற்றமாட்சியதே எனைநனைத்த மழை!ஆழ்ந்தமன உறுதியுடன் அயராமல் போராடிபாழ்பட்ட சட்டம்நீங்கப் பார்த்திட்டார்!---ஏழுநாட்கள்துகிலின்றிப் போராடி துலக்கமதைக் கண்டயிளைஞர்மகிமையதே எனைநனைத்த மழை!பொழுதெல்லாம் போராடி போற்றத்தக்க வெற்றிகண்டார்பழுதற்ற மாணவர்தம் பண்பினால்!---எழுச்சிகண்டு,நெகிழ்ந்திடுதே மக்கள்தமின் நெஞ்சமெலாம், காண்கின்றமகிழ்ச்சியதே எனைநனைத்த மழை!கொண்டமன உறுதிசிறிதும் குலையாமல் மாணவர்கள்எண்ணற்றோர் போராடும் எழுச்சியற்றார்!---ஆண்டாண்டாய்,வேண்டிநின்ற அவர்களன்று , விவேகமுடன் காத்திட்டமாண்பதுவே எனைநனைத்த மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.