குடையொன்றும் தேவேயில்லை
கூட வர காதலியும் தேவை இல்லை
மழையே நீ வந்தாலே !
குறுவிதைகள் மொட்டுக்கள் மலர்ந்திடும்
நீ வந்ததாலே !
கார்மேகம் கை அசைத்து உன்னை
பூமிக்கு அனுப்பியதோ..
மின்னல் லாந்தல் ஏந்தி இரவில்
வழி காட்டியதோ …
மின்னும் துளியே வரும் வழியில்
காற்று பட்டை தீட்டியதோ ..
உன்னில் ஒவொருமுறை நனையும் போது
புதிதாக பிறக்கின்றேன்
என்னை நனைத்த மழையே …
நீ மாதம் மும்மாரி வராமல் போனது …
மனிதர்கள் செய்த பிழையே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.