வெற்றி முரசு
கொட்டுவதற்கான
வாய்ப்பு பலருக்கு
வாய்ப்பதே இல்லை.
வெற்றி முரசு
கொட்டியவர்களும்
வெற்றியை நிரந்தரமாக
கொண்டாட முடிவதில்லை.
நியாயமான முறையில்
வென்றாலும்
நியாயமற்ற முறையில்
வென்றாலும்
தவறாமல் கொட்டி விடுகிறார்கள்
வெற்றி முரசு.
நியாயமற்ற முறையில்
வென்றவர்கள்
கொட்டப் படும் போது
வெட்கப் படுகிறது
வெற்றி முரசு.
வெற்றி முரசு
கொட்டப் படும் போதெல்லாம்
மக்கள்
தோல்வி முரசைத்
தழுவியதாகவே பொருள்.
வாழ்வில் ஒரு முறையும்
வெற்றிப் பெறுவதில்லை
வெற்றி முரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.