அரியாசனம்: முனைவர் . கா. மகேந்திரபிரபு

Updated on
1 min read
அரியாசனம் யார் கையில் ? 
அரியாசனமறியா மக்கள்  இல்லை !
அறிவுடையோர் ஒதுங்கி நிற்க 
மாறுவேடம் தரித்து மயக்கி 
ஒட்டி உறவாடி வஞ்சனை செய்து 
காத்திருந்து உயிரை குடித்து 
கணநேரத்தில் ஒன்று கூடி 
ஊரை நம்ப வைத்து நாடகமாடி 
முரட்டுக்கூட்டம் நூதனமாய் 
ஆட்டம் போட்டு அரியணையில் அமர ! 
மக்கள் தான் தெருவில் நிற்கிறோம் !
இதுவா மக்கள் ஆட்சி இல்லவே இல்லை !
மக்கள் வறுமையே மூலதனமாய்
பணம் பெற்று ஓட்டு போட்டு 
இலவசமழையில்  நனைந்து 
எதையும் கேட்கும் தகுதியில் இல்லையே !
பணம் உள்ளவர் கையில் அதிகாரம் 
அதிகாரம் உள்ளோர் அரியணையில் !
இனியாவது சிந்திக்கலாமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com