அரியாசனம் கொள்ளவேண்டும் பெருமை தன் மேல் அமரும் தலைவன் முகம் பார்த்து ! தலைவன் அவனும் சிந்திக்கவேண்டும் இந்த அரியாசனத்துக்கு தானும் பெருமை சேர்க்க வேண்டும் தன் நன்னடத்தையால் என்று !
தலைவனுக்கு அரியாசனம் தரும் பொது சனம் ஏதும் அறியா சனம் அல்ல ! ஒரு ஜடமும் அல்ல ! அரியாசனம் ஒரு தலைவனுக்கே நிரந்தரமும் இல்லை !
புரிய வேண்டும் ஒரு உண்மை தலைவனுக்கு .. அவனை அரியாசனத்தில் அமர்த்துவதும் பொது ஜனம் அரியாசனம் அவனுக்கு சரியாசனம் இல்லை என்றால்
சரியான தருணத்தில் தலைவன் அவனை கீழே
இறக்கி விரட்டி அடிப்பதும் அதே பொது ஜனம்தான் என்று !