புதிய ஆண்டு
பிறக்கும் போதே
நினைவிற்கு வருகிறது
புதிய டைரி .
புதிய ஆண்டில்
அன்பளிப்பாகவோ
இலவசமாகவோ
விளம்பரத்திற்காகவோ
கையில் கிடைத்து விடுகிறது
ஒரு புதிய டைரி.
புத்தாண்டு தொடக்கத்தில்
புத்துணர்ச்சியில் எழுதப் படுகிறது
ஓரிரு நாள்களே
புதிய டைரி.
எவரும் உண்மையை
எழுத வில்லை என்னும்
உண்மை தெரிந்திருக்கும்
புதிய டைரி.
அவரவர் நியாயத்தையே
பதிவு செய்யப் பயன் படுகிறது
புதிய டைரி.
புதிய டைரி
பயன் படுத்தும் போது
மனத்தில் நிழலாடுகிறது
பயன் படுத்தப் படாமல்
பரணில் கிடக்கும்
பழைய டைரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.