விரும்பி வாங்கப்படும்
டைரிகள்
விருப்பமில்லாமல்
எழுதப்படுகிறது
முதல் ஒரு வாரம்
நினைவுகளையும்
மீதியுள்ள வாரங்கள்
வெறுமையிலும் நிரம்பியிருக்கும்
பால் கணக்கு
செலுத்தப்பட்ட வட்டி
மாத சம்பள வரவுசெலவு
தொலைபேசி எண் எழுத
புதிய பேனா எழுதிப்பார்க்க
ரசீது சீட்டுகளை செருகி வைக்க
முக்கியமான தாள்களை
பத்திரப்படுத்தவும் பயன்படும்
முதலாண்டில் ட்யூசன் நோட்டாகவும்
இறுதியாண்டு பயிலும் போது
நினைவு பெட்டகமாய்
மாறிவிடுகிறது மாணவர்களுக்கு
பத்திரப் படுத்த முடியாது
என்பதால்
நடுத்தர மக்களால் இன்றுவரை
நிகழ்வுகளையும்
நினைவுகளையும்
எழுத முடிவதில்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.