புதிய டைரி: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

சொல்ல முடிந்ததை 
சொல்லி மனம் ஆறலாம் 
சொல்ல முடியாததை 
புதிய டைரியே கூறலாம் 

நிகழக் காத்திருக்கும்
புதியப் புதிய நிகழ்வுகள்
ஒவ்வொன்றும் நம்மை
புகழவும் செய்கிறது
மகிழவும் செய்கிறது
நெகிழவும் செய்கிறது
அழுகவும் செய்கிறது

நன்மையோ தீமையோ 
லாபமோ நஷ்டமோ 
தயவோ தடையோ
குறிப்பெழுதும் டைரி

தவறினை திருத்திக் கொண்டிட 
சரியினை நிலைக்கச் செய்திட
குறிப்பெழுதும் கையேடாய்
விளங்கிடும் புதிய டைரி

பிறப்பை இறப்பை
உழைப்பை இழப்பை
எழுதப்படிக்க புத்தி தெளியும் 
கழுத்திற்கு கத்தியும் அதுவே 

எசக்கு பிசக்கு கணக்கு 
எழுத காட்டிக் கொடுத்து 
கம்பி எண்ண வைக்கும் அதுவே

நேர் வழி என்றும் எழுந்து
நிமிர்ந்து நிற்கும் மாற்று வழி என்றும் 
மறைத்திடவே நினைக்கும்

இடம் மாறினும் கக்கத்தை
விட்டு விலகாது சிலருக்கு
தடம் மாறிவிடில்
கண்கள் உறங்காது சிலருக்கு

நண்பரும் பகைவரும் 
வெளியில் இல்லை மாறாக
உனக்குள்ளே அடையாளம் 
காட்டிடும்  புதிய டைரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com