புதிய டைரி:  ரீகன். ஜெயக்குமார்

Updated on
1 min read

காலண்டர் தாள்கள் 
காலியாகிப்போகின்றன... 

கிழித்துக் கழிந்த நாட்களில் 
கிடைத்த அனுபவங்கள், 
கொஞ்சமா நஞ்சமா எண்ணில் அடங்காது

ஊழலின் 
ஊர்க்கோலம் ஒருபுறம்... 
அதை 
ஒழிக்க வருபவன் 
ஊமை ஆக்கப்படும் 
அவலங்கள்... 

நீதிமன்ற வாசலில் 
நித்திரையில் 
அரசு எந்திரம்...

இயற்கைச் சீற்றங்ககள். 
இடர்ப்படும் மக்களைக்காட்டி 
பிடுங்கிடும் கூட்டங்கள்... 

இருட்டிலே கிடந்தாலும் 
இலவசத்திற்கும் 
இனிப்புப் பேச்சுக்கும் ஏமாறும் 
நாட்டு மக்கள்... 

இப்படித்தான் இருக்குது 
இன்னும் பலவாய்...! 

கசப்புக்கள் 
இனியும் வேண்டாமே... 
இவற்றையெல்லாம் விடுத்து 
இனிதாய் மலரட்டும் 
இனிவரும் புத்தாண்டு...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com