புதிய டைரி.: ரெத்தின.ஆத்மநாதன்

Updated on
1 min read

புதிய டைரி...
ஓசியாய்க் கிடைத்தாலே
உளமது மகிழும்!

டிசம்பர் பிறந்தாலே...
போன வருடம்
டைரி கொடுத்தவர்களை 
மனம் அசை போடும்!

கடைகள்...வங்கிகள்...
கம்பெனியில் பணிபுரிவோர்...
இவர்களையெல்லாம்
எங்காவது காண வேண்டுமென்று
உள் மனம் சொல்லும்!

எதிர்பார்த்தபடி...
எவரும் சிக்கவில்லை என்றாலே...
கடைகளைத் தேடி கால்கள் நடக்கும்!
நம் காசில் என்றால்...

சின்னதாய் டைரி!
-ஓசியில் என்றால் டிக்‌ஷனரி போல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com