புத்தாண்டுக் குறிப்பேட்டில் நல்லநல்ல செய்தியையே
பொழுதெல்லாம் எழுதவேண்டும்;
போனஆண்டு தனில்நிகழ்ந்த வேண்டாத நிகழ்வுகள்
புத்தாண்டில் நிகழவேண்டாம் !
எத்தனையோ அவலங்கள் தன்னைநாம் கண்டிட்டோம்
என்றும்நம் நினைவில்நிற்கும்;
எல்லாமும் மோடியால் வந்திட்ட வினையாகும்
இந்தியர்கள் மறக்கமாட்டார் !
உத்தமமோ பணத்தாள்களை செல்லாதென ஆக்கியதும்
உரியநல் பலன்கிடைத்ததா ?
ஒழியுமோ கருப்புப் பணமதுவும் லஞ்சமதும்
ஊழலதும் நாட்டிலினிமேல் ?
நித்தமொரு திருத்தமதை மோடியவன் சொன்னதேன்
நினைத்துநாம் சிரிக்கத்தானோ ?
நிறைவான மதிதன்னைக் கொள்ளாதான் மோடியென
நிரூபணம் ஆனதுண்மை !
புதுவருடக் குறிப்பேட்டில் புலம்பல்களே இல்லாமல்
மதுரமிகுச் செய்திகளே மணக்கட்டும்;-- பொதுவாக
நன்றான ஆட்சிகண்டு நலன்களெல்லாம் மலியட்டும்;
என்றென்றும் தொடரட்டும் இது!
பதினாறாம் ஆண்டுக் குறிப்பேட்டில்---நாம்
பார்த்தவை அனைத்தும் அவலங்கள்!
மதிகெட்டச் செயலென்றே ஆனதென்ன---பணத்தாள்
மாற்றமும் மக்களை வறுத்ததென்ன!
சதிகாரர் மல்லையா லலித்மோடி---போன்றோர்
சத்தமே இல்லாமல் தப்பியதென்ன?
புதியயிவ் ஆண்டின் குறிப்பேட்டில்---இதுபோல்
போக்கற்றச் செய்திகள் வேண்டாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.