எதிர்காலம்: சு.அய்யப்பன்

Updated on
1 min read

நாளா? கோளா? எதிர்காலம்
     நாடுங் குறிக்கோள் எதிர்காலம்
நாளா? இரவா? எதிர்காலம்
     நாளும் பகல்தான் எதிர்காலம்
வாளா விருந்தால் எதிர்காலம்
     வாழ்க்கைக் கதுவே புதிர்காலம்?
நாளைப் நமதே தானென்ற 
நம்பிக் கையில் எதிர்காலம்

நினைத்தால் இனிக்கும் மழைக்காலம்
     நிழலுக் கலையும் வெயிற்காலம்
பனியே பொழியும் பனிக்காலம்
     பருவ மாறும் நம்காலம்
கனியும் கனியும் எதிர்காலம்
     காலங் கனிந்தே வருங்காலம்
இனியா? பிறக்கும் அடுத்தகணம்
     எதிர்பார்த் திருக்கும் எதிர்காலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com