எதிர்காலம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

முகச்சாயம் பூசியோர்கள்
ஏழையெளியோரை எளிதில்
காசாயம் வைத்து குடித்திட
விவசாயிகள் கிடைத்தனர்


விதைகள் முளைக்கும்
அரவம் தெரியாமலே  அது
மரமாகி விழுந்திடும் போது
பூமியே அதிர்ந்து போகிறது
மனம் உறைந்திடும் போலே
இதுதான் நடக்கிறது இன்று
விவசாயிகள் சமுகத்திலே
என்னாகும் எதிர்காலம்••?


விளைப்பயிரைப் பயிராய்
எண்ணாது விவசாயி தன்
உயிருக்கு மேலாக
உயிராக எண்ணுவதால் இன்றோ
அந்தப் பயிர் நீரற்று வாடும் வதை 
தாங்க முடியாது தன்
உயிரையே தியாகம் செய்கிறான் விவசாயி
என்னாகும் எதிர்காலம்••?


கையை விரித்திட்டது பருவமழை அரசாங்கம்
கண்ணிருந்தும் குருடாகி
வழி அறியாது அலைகிறது


நினைக்க வேண்டியவர்
நினைத்திருந்தால் மழை
கிணறு  நதி நீர் கிடையாத
பட்சம் டேங்கர் நீரையேனும்
ஊற்ற வழிவகுத்திருக்க
பயிர்களை காத்திருக்கலாம்
உயிர் சேதம் நின்றிருக்கும்


எவன் வாழ்ந்தென்ன
எவன் செத்தால் நமக் கென்ன நதிநீர் பூபாலம்
அதை கேட்க காதில்லை
பதவிக்காய் எக்காளம்
என்னாகும் எதிர்காலம்••?


மாநிலமோ மத்தியமோ
அரசு நினைத்திருந்தால் 
இத்தனை இல்லங்களில்
முகாரி இராகம் நுழைந்து
முக்கம் குலைந்திருக்காது
என்னாகும்" எதிர்காலம்••?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com