எதிர்காலம் : கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

எதிர்காலம் என் கண்முன்னே விரிந்து 
கிடக்கிறது;எங்கும் மகிழ்ச்சி,
எங்கும் ஆனந்தப் பேருவகை.இப்படிச் 
சொல்லத்தான் ஆசை எனக்கும்;ஆனால்,
உண்ணும் சோறும் பருகும் நீரும் 
பாழாய்க்கிடக்கிறதே?

விதைத்தவன் உறங்கலாம்,
விதைகள் உறங்காது என்றார்கள்.
டெல்டாவில் நிலைமையோ,
விதையும் செத்தது,விதைத்தவனும்
செத்தான்;அவன் சாகுபடி செய்ததனால் 
சாகும்படி ஆனது;
நேர்மறை எண்ணம் தேவைதான்!

எதிர்மறையாய் இயங்கும் அரசுகளால் 
(கர்நாடக ,மத்திய  மாநில )
நினைப்பெல்லாம் நிலைகுலைந்து  போனதே ?
கேள்விக்குறியான விவசாயியின் எதிகாலத்தின் 
கூன் நிமிர்த்தி,ஆச்சர்யக்குறியாக்க
ஆவன செய்ய, படித்தோரெல்லாம்
களமிறங்குவோம்;அல்லல்படுவோரை 
ஆற்றுப்படுத்துவோம்.அதுவே,
நாம்கற்றதனாலாய பயன்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com