எதிர் காலம் :  கு.முருகேசன்

Updated on
1 min read

எதிர் காலம்
வருங்காலத்தில் அல்ல - அது  
நிகழ்காலத்தின் நீட்சி!

காசு கொடுத்து புத்தகம் வாங்கலாம்
கல்வியை அல்ல
காசு கொடுத்து கடிகாரம் வாங்கலாம்
காலத்தை அல்ல!

பணமில்லாப் பரிவர்த்தனை
இந்தியாவின் லட்சியம்
பணமில்லாதவன் வாழ்விற்கு
என்ன நிச்சயம்?

செயற்கை கோளுக்கும்
இயற்கை விவசாயத்திற்கும்
நல்ல எதிர்காலம்
என்கிறது ஆராய்ச்சி!

கலப்பை பிடிப்பவனையும்
கணினி பிடிப்பவனையும்
சமமாக ஏற்க மறுக்கிறது
மனசாட்சி!

வகுப்பில் முதலில் வருபவன்
வாழ்கையில் முதலில் வருவதற்கு- எந்த
உத்தரவாதமும் இல்லை!

வகுப்பில் வாழ்கை இல்லை
வாழ்க்கையில் வகுப்பிருக்கிறது!

விதையின் எதிர்காலம்
செடியில் இருக்கிறது!

செடியின் எதிர்காலம்
மலரில் இருக்கிறது!

மலரின் எதிர்காலம்
கனியில் இருக்கிறது!

ஊழல்வாதிகளின் எதிர்காலம்
ஆச்சரியமாக இருக்கிறது!

உழைப்பாளிகளின் எதிர்காலம் மட்டும்  
கேள்விக்குறியாகவே இருக்கிறது!

கடன் இல்லா விவசாயி
கரை புரண்டோடும் காவேரிகாகி
தம் இல்லா அலுவலகம்
கையூட்டு வாங்காத அதிகாரிகருப்பு
ப் பணம் இல்லாத சமூகம்
தற்கொலைகள் இல்லாத தேர்வு முடிவுகள்
அமைந்தால் வளமான எதிர் காலம் – அன்றேல்எ
திர் காலமே - பலருக்கு
இறந்த காலம்!

கடன் கட்டாத முதலாளி
காற்றில் பறக்கிறான்!
கடன் கட்டாத விவசாயி மட்டும்
கயிற்றில் இறக்கிறான்!

எல்லோருடைய
எதிர்காலத்திலும்
மரணம் உண்டு
மரணத்திற்குப் பின்பும் வாழ்பவன்
மற்றவர்க்கு எதிர் காலம் ஆகிறான்.

இந்தியாவின் எதிர் காலம்  
இளைஞர்கள் கையில்!
இளைஞர்களின் எதிர் காலம்
நம்பிக்கையில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com