எதிர்காலம்:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

Updated on
1 min read

ஊசிப்போ னபண்டமென இறந்த காலம்
    உள்ளதய்யா அதையிங்கு வுண்ண லாமா!
வாசிக்க முடியாத வார்த்தை போல
    வருகுதய்யா எதிர்காலம் வந்தால் என்ன
யோசிக்க இயலாத நிலையில் காலம்
    இருக்கும்போ தேநழுவிச் செல்லும் மீண்டும்
காசினாலும் வாங்கிடவே முடியா தன்றோ?
    கையிலுள்ள நிகழ்காலம் அனுப விப்போம்!

தன்னம்பிக் கைக்கொண்டு எதிர்கொண் டாலே
    தானாக எதிர்காலம் நலங்காட் டும்நம்
முன்னோர்கள் வகுத்தநல்ல வழியில் செல்ல
    முன்வரும்நல் எதிர்காலம் நன்மை செய்யும்
என்னதான்வ ரட்டுமந்த எதிர்கா லத்தில்
    எதிர்கொள்வோம் கவலையெலாம் கொன்ற ழிப்போம்
என்னுமொரு கொள்கையினைக் கடைபி டித்தால்
    எதிர்காலம் சிறந்திடுமே நினைவில் வைப்போம்.

முன்னம்ப ழவினையெலாம் முடிந்த தென்று
    முடிந்தமட்டும் மறந்துவிட்டு நிகழ்கா லத்தில்
எண்ணம்ந லங்கொள்ள இருப்போம் நெஞ்சில்
    இருப்பதெலாம் நல்வினையாய் ஆக்கி மாந்தர்
திண்ணமுற வாழ்வினிலே நன்றாய் வாழும்
    திருப்பத்தை உண்டாக்கி வைப்போம் என்றும்
வண்ணமுற எதிர்காலம் வருக வென்றே
    வரவேற்போம் மானிடரின் நல்வாழ் விற்கே!              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com