நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு ...சொன்னான்
வள்ளுவன் ! வள்ளுவன் வாக்கையும் வென்று
நான் காண்பேன் கதிரவனை நாளை காலை
என்னும் நம்பிக்கை நம் எதிர்கால கனவுக்கு
நாம் போடும் அடித்தளம் ...இன்று இல்லாவிட்டால்
என்ன ..."நாளை நமதே" என்னும் நம் நம்பிக்கை
மாற்றும் நம் எதிர்காலத்தை ஒரு வசந்த காலமாக !
புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் ...ராசி
பலன் சொல்வதும் அல்ல நம் எதிர்காலம் !
நம் எதிர்காலம் நம் கையில்தான் ..கை ரேகையில் அல்ல !
"நாளை நமதே " என்னும் நம்பிக்கை நனவாக
தேவை இன்று நம் கடின உழைப்பு ...
உழைப்பு ...விடா முயற்சி ..தன்னம்பிக்கை
இம்மூன்றும் அருமையான வித்தாகும் ஒரு
முத்தான எதிர் கால மலர் பூங்கா பூத்துக் குலுங்க!
எதிர்காலம் நமக்கு ஒரு வசந்த காலமாக மலரட்டும் !
எதிர் மறை நினைவும் உணர்வும் நம்மை விட்டு விலகட்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.