நிகழ்காலத்தில் செயலற்றுப் போகும் போது
எதிர்காலம் என்பது வெற்றிடமே!
நிகழ்காலத்தில் இருகண் குருடனாய் அலையும்போது
எதிர்காலம் என்பது சூன்யமே!
நிகழ்காலத்தில் இதயத்தை தொலைத்துத் திரியும்போது
எதிர்காலம் என்பது துன்பமயமே!
நிகழ்காலத்தில் உண்மையைப் புதைத்து விடும்போது
எதிர்காலம் என்பது மரணமே!
நிகழ்காலத்தில் முழுமையாய் வாழும் போது
எதிர்காலம் என்பது பூரணமே!
நிகழ்காலத்தில் அன்புமயமாக மிளிரும் போது
எதிர்காலம் என்பது பேரொளியே!
நிகழ்காலத்தில் நேர்வழியில் பயணிக்கும் போது
எதிர்காலம் என்பது இன்பமயமே!
நிகழ்காலத்தில் உண்மையோடு உணர்வும் சங்கமிக்கும்போது
எதிர்காலமென்பது உன்னதவாழ்வின் ஜனனமே!
நிகழ்காலம் மட்டுமே நிஜத்தில் உண்மை
நிகழ்கால நிஜமாக வாழ்வதுமேன்மை!
நினைவில் இருப்பது இறந்த காலம்
நினைவாய்க் கற்பனைச்செய்வது எதிர்காலம்!
வாழ்ந்தேன்; வாழவேண்டும்; என்பது வாழ்வாகாது
வாழ்கிறேனென்னும் உண்மையே வாழ்வாகும்!
வாழ்வை உண்மையாக வாழ்ந்திரு -வாய்த்த
வாழ்வை முழுமையாய் வாழ்ந்திரு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.