மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read
புலி வருகிறது புலி வருகிறதென நாளுக்கு 
நாள் கூறப்படுவதால்

கிலி  வருகிறது நாளும் நெஞ்சங்களிலே அந்த
வலி வந்த வண்ணம் இருப்பினும் ஓர்நாள்

புலி வந்தே தீருமன்றே
மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு

துள்ளிக் குதிக்கின்றது
இளம் வீர சிங்கங்கள்

தடைவிதித்த வேதனையில்
முற்றுப் புள்ளியிட முடியாது 

எள்ளி நகையாடுவோர்க்கு
சொல்லிப் பாடம் புகட்டாது

விடுவரோ நள்ளி எலும்பு
கிள்ளி எரிமாப்போலவே

எதிர்ப்புகள் எதிர்கொள்வது 
நம் அபாயத்தைக் கருதியே

ஆயினும் காயப்படுத்தி விடாது காத்திடல் நலமே
புலியையே தானியத்தைப் புடைக்கும் முறத்தால்
மங்கையர் விரட்டியடித்த மறபு ஏட்டை புறட்டியறியார் 

மறுதளிப்போர் யாவரும் 
ஓர் நாள் மறுக்களிப்பார்

இது சிறு இடைவெளியே பொருமை காத்திடுதல் பெருமைக் கடிதளமே
பாரம்பரிய  விளையாட்டு 
ஓரங்கட்ட பார்ப்போர்கள்

மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு
ஒரு ஓரம் நின்று காணாமல்
  
போய் விடுவரோ அதையும்
காணாமல்  போவோமோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com