ஏறு தழுவி இளங்காதலியைக் கைப்பிடிக்கும்ஏற்றமிகு தமிழ் இளைஞர் கலாச்சார மன்று மாற்றார் கண்பட்டதே, அவர் தடையைத்தமிழ் மாநிலத்தில் வைத்ததால் நம்மரபுரிமை போனதே.‘விலங்கின் நலம் என்று விண்ணதிரக் கத்துவோரேவிலங்கிட்டு ஆனையைக் கோயிலில் கட்டிவைத்துகலங்கவைக்கும் செயலும் மிருகவதை யாகாதோ? இதுபோல் கணக்கற்ற விலங்குகளும் கண்ணில் படவிலையோ?கிளியும் குதிரையும் கிளர்ந்தெழும் புறா சேவலோடுஒளிந்துவாழும் நல்ல பாம்பைப் பிடித்தாட்டலும்ஆட்டுச் சண்டையும் குரங்கின் இம்சையும் பீட்டாவுக்குகாட்சி விலங்கின் வதையாய்த் தெரியலையோ? சாதிமத பேதமின்றி தமிழ்ச்சமுதாயம் பொங்கலிட்டுசதிராடும் காளைக்கு கொம்புசீவி அழகூட்டி வீதியில் ஓடவிடும் மஞ்சு விரெட்டென்னும் வீரவிளையாட்டை ஆடிடக் காளையாரே விரைந்திடுவீர். மத்திய மாநில அரசுடன் தமிழ் மக்கள் மல்லுகட்ட,பித்தம் கலங்கி இங்கரசியல் கட்சிகள் பேசிடினும் அன்றைய கலாச்சாரம் பாதுகாக்க காளையரே நீவிர் ஆண்டு தவறாமல் ஆடிடுவீர் ஜல்லிக்கட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.