ஆண்டு பலவாகியும்,மாண்டவர்
பலராகியும் மீனவர் பிரச்னையைப்
பேசுகிறோம், தீர்க்கிறோம்
என்று பொய்யான உறுதி தரும் புளுகுணி
அரசியல் வாதிகளைத் தோலுரிக்க வருகிறது
ஜல்லிக்கட்டு! வார்த்தைகளால்
மல்லுக்கட்டும் இந்த
பகல் வேடக்காரர்களை
இனியும் நம்புவதா?
இடுப்பு வேட்டியை இறுகக் கட்டுங்கள்;
சீறும் காளையைக் கூர்தீட்டி அவிழுங்கள்!
சத்தமில்லாமல் சட்டம் "சட்"டெனத்
திறந்து கொள்ளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.