மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: முத்துலெட்சுமி

Updated on
1 min read

வீரத்தமிழர்
எங்கள்வீட்டு செல்லப்பிள்ளை
எங்களோட காளை
புல்லோடு பாசத்தையும்
போட்டுத்தான் வளர்த்தோம்

கொம்புமுதல் வாலுவரை
கொஞ்சிகொஞ்சி ரசிப்போம்
அம்மாயென்று அதுபோடும்
சத்தத்தில்தான் விழிப்போம்

நந்திய வணங்கித்தான்
சிவனையே பாப்போம்
திருவிழாவில் எங்கவீட்டில்
தெய்வமே மாடுதான்

எங்கமண்ணின் வீரத்த
காங்கேயம் சொல்லும்
ஆப்பிரிக்க யானைக்கூட
அதுமுட்டித் தள்ளும்

இமயம்போல எழுந்துநிற்கும்
காங்கேயம் திமில்அழகு
எகிறிவரும் காளைகளை
எதிர்க்கும்எங்க திமிர்அழகு

எங்களோட வீரத்தின்
அடையாளம் ஐல்லிக்கட்டு
எவன்அதை தடுத்தாலும்
அங்கேயே அவனைமுட்டு

மக்கள்கேட்கும் சட்டத்த
கொடுக்காத நீதியெதற்கு
நிதிவாங்கி நீதீசொல்லும்
நீதிமன்றத்திற்கு மதிப்பெதற்க்கு

தடையுடைத்து ஜல்லிக்கட்ட
தைரியமா நடத்துவோம்
அதற்காக கைதுசெய்தால்
அப்பவும்மீசை முறுக்குவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com