மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: -ரெத்தின.ஆத்மநாதன், 

Updated on
1 min read
காளையுடன் மல்லுக்கட்டும் காளையரே கணவரென்று கன்னிப் பெண்களெல்லாம் காத்திருந்த காலமுண்டு!தெருவுக்கு ஒருவரேனும் சீர்மிகு பிள்ளை போல காளையை வளர்ப்பதுண்டு இங்கு காலங் காலமாய்!ஜல்லிக் கட்டுக்கென்றே இளைஞர்கள் வெகுவாய்தவங்கிடந்து உடல்பேணி தகுதிபெற்றுத் திகழ்ந்திடுவர்!அலங்காநல்லூரே ஜல்லிக்கட்டின் ஆரம்ப நல்லூராய்வரலாற்றின் பக்கங்களில் வைரமாய் மின்னி ஜொலிக்கும்!காளையரே இக்களி விளையாட்டில் காயம் மிகப்பட்டுஇன்னுயிரை ஈந்த இரக்கக் கதைகள் பலவுண்டு!கோர்ட்டார், காளைக்குப் பங்கம் விளைவிப்பதாய்கழறுவதைப் பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுதையோ!'ஏறு தழுவுதல்'என்றே ஏடுகள் ஜல்லிக்கட்டை ஏகமாய்ப் புகழ்வதை எடுத்தியம்பி வாதிடணும்!'காளையை அணைத்தல்'என்றே இதன் பொருள் என்பதனைகனம் கோர்ட்டாரின் காதுகளில் ஓத வேண்டும்!அயல் நாட்டினர்கூட அலங்கா நல்லூருக்கு ஆண்டு தோறும் வருவதுண்டுஅமைதியாய்க் கண்டுகளிக்க!இன்றோ!மத்திய அரசு மல்லுக் கட்டுகிறது!உச்ச நீதி மன்றமோ ஒத்துக் கொள்ள மறுக்கிறது!கல்லூரிக் காளையரும் கன்னியரும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டு கேட்டு மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளனர்!பாரம்பரியத்தை பண்பாட்டை பல்லாயிரக் கணக்கோரின் விருப்பத்தை ஈடேற்றுமா விளங்கும் இரு அரசுகளும்?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com