மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு :  கு.முருகேசன்

Published on

காளைகள் காளைகளோடு  
விளையாடுவது ஜல்லிக்கட்டு!   
அரசாங்கம் மக்களோடு
விளையாடுவது மல்லுக்கட்டு!

அரசு
மட்டை பிடித்து விளையாடுபவனை
ஊக்குவிக்கிறது!

மாட்டை பிடித்து விளையாடுபவனை
ஒதுக்கி வைக்கிறது!

மட்டை பிடிக்கும் விளையாட்டில்
வாரியம் அமைத்து ஊழல் செய்கிறது!
மாட்டை பிடிக்கும் விளையாட்டில்
வாரியத்திற்கும் ஊழலுக்கும் வழியில்லை
என்பதால் மறுக்கிறதா?

வெளிநாட்டிலிருந்து
வந்த கிரிக்கெட்டுக்கு
தொலைக்காட்சியில்  நேரலை!

ஏன் நம் நாட்டு விளையாட்டான
ஜல்லிக்கட்டுக்கு அது நேரல?
எரோட்டுபவனுக்கு ஒரு நீதி
காரோட்டுபவனுக்கு ஒரு நீதியா?

தமிழர்க்கு!
ஏரு உழுதல் விணை
ஏறுதழுவுதல் விளையாட்டு!
காளை தமிழனின் சகோதரன்
ஒரே தாயின் பாலைக்குடித்து
வளர்ந்த காளையும் காளையும்
விளையாடும் சகோதர விளையாட்டு!

ஜல்லிக்கட்டு
காளைக்கு உடற்பயிற்சி!
தமிழர்க்கு
விளையாட்டு இல்லாமல்
பாடவேளையும் இல்லை!

பொங்கல்
பண்டிகையும் இல்லை!
அரசே!

காட்டு விலங்கை
காட்சிப்படுத்தும் விலங்குகள்
பட்டியலில் வைத்தாய்?

ஏன்
வீட்டு விலங்கையும்
அதில் சேர்த்தாய்?

யானை
பிச்சை எடுப்பதை
கண்டுகொள்ளாத அரசு!

காளை
விளையாடுவதை
கண்டிப்பதேன்?

குத்துச்சண்டையை
விளையாட்டாகப் பார்க்கும் உலகம்
தமிழர் விளையாட்டை மட்டும்
ஏனோ சண்டையாகப் பார்க்கிறது?

விலங்குகளின் நலனுக்கு
குரல் கொடுக்கும் ‘பீட்டா’காரன்!
காளையின் வாலைப் பிடித்தால்
வதை என்கிறான்!

சிமியைப் பிடித்தால்
சித்திரவதை என்கிறான்!
சகோதரனோடு விளையாடும்
எங்கள் கலாச்சாரத்தில்
கல் எறிவதற்கு
நீ யார்?

மாடுகளின் நலனுக்கு
குரல் கொடுப்பதாகச் சொல்லும்
பீட்டாகாரனே!

இதுவரை நீ எத்தனை
இறைச்சிக் கடைக்கு
மூடுவிழா செய்திருக்கிறாய்?

தமிழா!
இதுவரை மஞ்சு விரட்ட
மல்லுக்கட்டினோம்-இனி
நம் காளைக்காக
பீட்டா வை விரட்ட
மல்லுக்கட்டுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com