மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: -பெருமழை விஜய்,:

Updated on
1 min read
மாட்டுடன் மல்லுக்கட்டும் மகத்தான விளையாட்டின்றுஅரசியலாகி விட்ட அவலத்தை என்ன சொல்ல?!காளையை  யடக்கிவிட்டு  கன்னியரின்  கைப் பிடித்த காளையரெல்லாம் இன்று கனலாகி நிற்ப துண்மை!அடித்தே சாப்பிடுவது அப்படியொன்றும் தப்பில்லையாம்!தழுவியே  விளையாடுவதுதான் தவறான  பெருங்குற்றமாம்!மக்களின்  உணர்வுகளை  மதிக்காத   அரசெதுவும்மக்களாட்சியில் நீடித்த தாயில்லை நீண்ட வரலாற்றில்!உள்ளூர் மாடுகளை ஒன்றுகூட இல்லாமல் அழித்துவிட'பீடா'வின்  சதியென்ற  வாதமும்  உண்மைதானோ?!நாளுக்கு நாளிங்கு நடக்குது பெரும் போராட்டம்மல்லுக்கட்டியாவது இங்கு ஜல்லிக்கட்டை நடத்திடவே!அரசும்  கோர்ட்டாரும்  நடத்தும்   நல் நாடகமிதுநயவஞ்சகமாய் மக்களைப் பழிவாங்கும் படலமிது!தேர்தல் வரும்போது தெரியும் இதன் பலன்களெல்லாம்!மக்களின்  மதிப்பதனை  அப்போது  உலகறியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com