நீதியைக் கண்டிட அலைந்திட்டும் காணாமல் நிம்மதி இழந்தவர் பல்லாயிரம், நேர்மை யாளர்க்கே தண்டனை நிச்சயம் நீதி தேவதைக்குக் கண்ணில்லையே !ஆதிநாள் முதலாக இதுயிங்கு தொடர்வதும் அபத்தமே என்றிட்டும் ஆகாதோ ; அறுபது ஆண்டுகள் ஆகிட்டும் ராமர்க்கே அதுயின்னம் கிடைத்ததா இன்றுவரை ?மேதினியில் நேர்மைக் குணமதும் குறையுது மேன்மேலும் குற்றங்கள் பெருகிடுதே ; மெய்தனைப் பொய்யதும் விலைதந்தே வாங்குது மெய்தன்னை பொய்யதும் வென்றிடுதே !சூதினைப் புரிபவர் பெருகிடும் கொடுமை சுத்தமாய் நாட்டினில் ஒழிந்திடணம்; சூழ்ச்சியால் பிறர்தமின் செல்வத்தைக் கவர்வதே சுகமெனும் சழக்கர்கள் ஒழியட்டுமே !இனத்துக்கோர் நீதியதும் சாதிக்கோர் நீதியதும் இன்னாட்டில் மட்டுந்தான், ஏனிந்தக் குளறுபடி ?தனதுமத நீதியதே தான்வேண்டும் என்பவரை தவறாமல் வெளியற்றத் தான்வேண்டும் என்போமே!மனம்போனப் போக்கினிலே சட்டங்களை இயற்றுவதும் மன்னிக்கத் தக்கதுவோ , மாட்சிமிக்க தாகிடுமோ ?வினயமுடன் பொதுவான சட்டமதை இயற்றுவதே வேண்டுகின்ற ஒன்றாகும், விரைந்திதனை செய்யட்டும்!நெடுந்தூரப் பயணம்வேண்டும் நீதிதன்னை நாம்காண, நிச்சயமாய் வாழ்நாளில் பாதியேனும் வேண்டும் !கொடுமையிது போலுலகில் வேறேதும் உண்டாமோ, குறைந்தது பத்தாண்டுகள் ஆகிடுமாம் இதுவுறுதி!படுபாதகம் புரிந்திட்டோர் உலவிடுவார் வெளியினிலே பாவிகட்கே நீதியதும் பணிந்துதுதி பாடிடுமாம் !நடுவர்க்க மாந்தர்கட்குக் கிட்டுவதும் அரிதாகும் நாடறிந்தப் பாவிகட்கு என்றால்மிக எளிதாகும் !நீதிதன்னைப் பெறவேண்டி நித்தங்கோடி மக்களவர்நாதியற்று அலைகின்றார் நாடெங்கும்! --- வீதியெங்கும்நீதிமன்றக் கிளைகள்தனை நிறுவத்தான் வேண்டுமதில்பாதிதமிழ் நாட்டில்வரப் பார் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.