நீதியைத் தேடி " ரீகன். ஜெய்குமார்

Updated on
1 min read

இவ்வுலகில் 
ஏழை..! செல்வந்தன்..!!
குற்றமற்றவன்..!
குற்றம் இழைத்தவன்..!!
வேண்டபட்டவன்..!
வேண்டப்படாதவன்..!!
என்னும் பந்தபாசம் 
பாராது நீதிவழங்கிடும் 
நீதி தேவதையே…!!

வாய்மை..! பொய்மை..!!
நீதி..! அநீதி..!!
நியாயம்..!அனியாயம்...!!
தர்மம்..!அதர்மம்..!!
இவைகளை பாரபட்சமின்றி கோடிட்டு காட்டும்...
நடுநிலை தராசினை கையில் ஏந்தி நிற்க்கும்
தேவதையே...!!!

உன்னிடம் கண்கட்டு 
வித்தை நடக்கிறதே…, 
அதை நீயறியும் 
நாள் வருமோ…?
உன் நீதியும் 
சுதந்திரம் பெறுமோ…?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com