நீதியைத் தேடி:  கு.முருகேசன்

Updated on
1 min read

நிதியைத் தேடி அலையும் உலகில்
நீதியைத் தேடும் தமிழினமே!   
வாடிவாசல் திறப்பதற்கு
மோடி வாசல் திறக்கலையே!

தொலைக்கவில்லை – ஆனாலும்
தேடுகிறோம் - நீதியை!
தமிழன் கலாச்சாரம்
தொலைந்து விடக்கூடாது என்பதால்!

காவிரிக்கு நீதி தேடினோம்
கண்ணீர் கிடைத்தது!
எருதுக்கு நீதி தேடுகிறோம்
ஏமாற்றமே கிடைக்கிறது!

அவசரமாகப் போராடுகிறோம்
நிரந்தர சட்டத்திற்கு!
அரசு நிதானமாக வழங்குகிறது
அவசரச்சட்டம்!

கண்ணகி
மதுரையில் நீதி கேட்டால்
மதுரை பற்றிக்கொண்டது!
மதுரைக்காக நீதி கேட்கிறோம்
தமிழகமே பற்றிக்கொண்டது!

அன்று
பசுவிற்கு நீதி வழங்கினான்
மனுநீதி!
இன்று
காளைக்கு நீதி வழங்கத்தான்
தேடுகிறோம்  ஒரு
மனுநீதி!

ஆறுகள் கலந்த கடலில்
அரசியல் கலக்காமல்
நீதியைத் தேடும்
இளைஞர் கூட்டம்!

வங்கக் கடல் பக்கத்திலே
சிங்கக் கடல்! ஜல்லிக்கட்டில்
வாங்கத்தான் துடிக்கிறது
தங்க மெடல்!

நீதி தேவதையே!
நீ கண்ணை கட்டியே இருந்தாலும்
நாணயம் உள்ளவன் பக்கமே
நீதி வழங்குகிறாய்?
நீ! வாழ்வில்
கண்ணாமூச்சியா
விளையாடுகிறாய்?

தமிழனின் வயல்
நதியைத் தேடுகிறது!
தமிழனின் குடும்பம்
நிதியைத் தேடுகிறது!
தமிழனின் மனம்
நீதியைத் தேடுகிறது!

கதைக்கே
நீதி தேடும் தமிழன்
காளைக்கு
நீதி தேடக்கூடாதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com