நீதியைத் தேடி: கே.நடராஜன்
ஒரு நதியின் நீருக்காக நீதி தேடி ஓடிய எங்கள்
ஓட்டம் ஒயவில்லயே இன்னும் ! மீண்டும் ஒரு
ஓட்டம் ..நாங்கள் ஓடுகிறோம் உன்னைத்
தேடி நீதி தேவதையே ! இந்த ஓட்டம்
எங்கள் நாட்டு மாட்டின் ஓட்டத்தைத்
தடுக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின்
கொட்டம் அடக்க !...ஒரே குரலில்
கேட்கிறோம் ஒன்றே ஒன்று மட்டும்
உன்னிடம் நீதி தேவதையே !
இழைக்கப்பட்ட அநீதி அழிக்கப்பட்டால்
கிட்டும் ஒரு சரியான நீதி எங்களுக்கு "
நீதி தேடி மீண்டும் உன் கதவு தட்டும்
காலம் இனி வேண்டவே வேண்டாம்
எங்களுக்கு நீதி தேவதையே !
நம்புகிறோம் நாங்கள் உன்னை !
வெல்வது நீயாக இருக்கட்டும் ..உன்
வெற்றியில் தழைத்து செழிப்பது எங்கள்
நாட்டுக் காளை இனமாகட்டும் ! எங்கள்
ஆவினம் குலம் தழைக்க நீ பெறும் வெற்றி
எங்கள் தமிழ் தாய் உள்ளம் குளிரும் வெற்றி !
நீதி தேடி நாங்கள் ஓடியது போதும் ! நியாயம்
இருக்கும் இடம் தேடி நீ ஓடி வா நீதி தேவதையே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
