நீதியைத்தேடி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
வாயிலிலே   கட்டிவைத்த   மணிய   டித்து            வாயில்லா   பசுவந்து   நீதி   கேட்கவாயிலுக்கே   வந்துமனு   குறையைக்   கேட்டு            வழங்கிட்டான்   உரியதொரு   நீதி  தன்னை !போயிரந்த  புறாவுக்காய்   சதைய  ரிந்து            பொலியவைத்தான்  சிபிமன்னன்  நீதி  தன்னைவாயிருந்து   தவறிவந்த   சொல்லுக்   காக            வழங்கியுயிர்   பாண்டிமன்னன்  நீதி  காத்தான் !மக்கள்தம்   முறையீட்டைக்   காதால்   கேட்டு            மன்னரன்று   சரியாகத்   தீர்ப்ப   ளித்தார்மக்களதை   ஏற்றதன்றி   மேலும்   மேலும்            மனுபோட்டு   வழக்குகளை   நடத்த   வில்லை !இக்கால   நீதிமன்றம்   நிதியின்   மன்றாய்            இயக்குகின்ற   சிலராலே   தாழ்ந்த   தாலேதக்கநீதி   கிடைப்பதில்லை ;   வழக்கும்   நீண்டு            தந்ததீர்ப்பும்   மாறிவிடும்   பணத்திற்   கேற்ப !தாத்தாவின்   சொத்துடனே   அப்பா   சொத்தும்            தழல்கதிர்முன்   பனிபோல   கரைவ   தன்றித்தாத்தாதான்   தொடுத்திட்ட   வழக்கு   பேரன்            தலையெடுத்து   வந்தபின்பும்   முடிவ   தில்லை !காத்திருந்தும்   சட்டத்தின்   ஓட்டை   யாலே            காணாமல்   போகிறது   நீதி  ஓடிமாத்திபுது   வழியொன்று   வந்தா   லன்றி            மாறாது   நீதிதேடும்   பயண   மிங்கே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com