யாவரும் சமமென்று
நாட்டிற்கே ஒன்றென்று
ஏட்டிலே எழுதிவைத்தார்
ஆள்வோர் மனத்தினிலே
தோன்றும் சாதகத்தை
அதனுள்ளே புகுத்திவைத்தார்
நீதியும் நேர்மையும்
தடைபட்டுப் போனதேனோ?
காத்திடும் வேலியை
காவலைத் தாண்டியே
செல்லவே செய்ததேனோ?
யாவும் கூட்டிலே
வாழ்கின்ற
பறவையைப் போலவே
அடைபட்டுக் கிடப்பதேனோ?
இருப்போரிடம் தலைவணங்கி
இல்லார்த்தலை குனியவைக்கும்
சட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.