சட்டம்: லட்சுமிபாலா.

Updated on
1 min read
பணக்காரன் கைக்கு எட்டுவது 
ஏழைகளின் கைகளுக்கு எட்டாகனி
ஏட்டில் அட்டமாக இருக்க
ஏனோ நடைமுறையில் 
இடியாப்ப சிக்கலுக்கே சவால் விடுகிறது.
சல்மான்கானுக்கு சலாம் போடும் சட்டம்
சாதராண சரவணுக்கு சவால் விடுகிறது.
சிறைக்கம்பிகளுக்கு உள்ளே இருப்பவன் 
எல்லோரும் குற்றவாளி இல்லை என்ற
பரமரகசியம் நாடறிந்த உண்மை

பத்து தடவை வாய்தா வாங்கிய
எட்டப்பன்கள் வீதி உலா வருகிறார்கள்
முதலை வாயில் வரை சென்று 
வெளியே வந்த வல்லவர்கள் ஏராளம்

நீதிமன்ற சட்டத்தை கருப்பு துணியால்
கட்டிய கோமகன்கள் யாரும்
அவனது மனசாட்சி தரும் 
தண்டனையிலிருந்து தப்பமுடியாது
என அவர் அறியார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com