சட்டம்:  கவிஞர் கே. அசோகன்

Updated on
1 min read
பூக்களும் விரிந்துதான் மலர்வதற்கும்பூமியும் தன்னைத்தான் சுற்றுதற்கும்பார்த்துதான் மகிழ்ந்திடும் நிலவும்பளிச்சென்ற மின்னுகின்ற நட்சத்திரங்களும்தூரலாய் பெய்யும் மழையதும்ஆர்த்தெழும் கடலதின் அலைகளும்ஆர்தான் வகுத்தனர் சட்டங்கள்தான்!அவைகள் இயங்குவதும் ஒரு சட்டம்தானே!பூமியை பிளந்துதான் கட்டிடம் கட்டிபெருமையாக நிமிர்ந்து நின்றால்பூகம்பம் வரும்போது நிலைகுலைந்துபுலம்புவது ஏன்தான் தெரியவில்லைஆகாது எதுவுமிலை என்றே மனிதன்ஆனமட்டும் இயற்கையை பாழ்படுத்தவேகமாக முன்னேதான் நிற்கின்றான்விளைவுகளை ஏனோ நினைப்பதில்லைகண்களுக்கு இமைகள்தான் பாதுகாப்பு!கவிதைக்கு நயம்தானே அழகுசேர்க்கும்!பெண்ணுக்கு தாய்மையே பாதுகாப்பு !புல்லுக்கு பனித்துளிகள் பேரழகு !விண்ணுக்கு  கதிரவன்தான் அரசாட்சிவிடியலுக்கு விண்மீன்தான் சாட்சியாகும்!மண்ணுக்கு சட்டங்களே நலம்பயக்கும்மனிதனுக்கு அவைதானே தற்காப்பு !                         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com