சட்டம் : கு.முருகேசன்

Updated on
1 min read
மக்களுக்கான சட்டம்மன்னனால் இயற்றினால்முடியாட்சி!மக்களுக்கான சட்டம்மக்களாலேயே இயற்றினால்குடியாட்சி!மக்களைவழிநடத்த சட்டம்!சட்டத்தைவழிநடத்த அரசு!   அரசைவழிநடத்த அதிகாரிகள்!அதிகாரிகளைவழிநடத்த அரசியல்வாதிகள்!அரசியல்வாதிகளைவழிநடத்த யார்?சட்டமன்றங்களும்நாடாளுமன்றங்களுமேசட்டத்திற்குபிறந்த வீடு!அறுவைசிகிசைக்குப் பின்தான்அவசரச்சட்டமே பிறக்கிறது!நீதிமன்றங்களேசட்டத்திற்குபுகுந்த வீடு!அங்குதான் விவாகரத்தேநடக்கிறது!மக்கள்சட்டத்தை மீறாமல்காக்க காக்கிச்சட்டை!சட்டத்தை மீறினால்காக்க கருப்புச்சட்டை!சட்டப்படி நடக்கும்மக்களைத்தான்சட்டம்சட்டை செய்வதே இல்லை!சட்டம்ஒரு சாலைகாசு இருப்பவன்காரில் போகிறான்!இல்லாதவன்காலில் போகிறான்!ஏழைக்குசட்டையில் ஓட்டை இருக்கிறது!பணக்காரனுக்குசட்டத்தில் ஓட்டை இருக்கிறது!எளியவனைவலியவன்தக்கும்போதெல்லாம்சட்டம்சாட்டையை சுற்றும்!காற்றுசட்டத்தை மீறினால் புயல்!மனிதன்சட்டத்தை மீறினால் புழல்!சட்டமே!நீ! நிரபராதிகளைதூக்கி விடவேண்டாம்!தூக்கிலிடாமல்இருந்தாலே போதும்!இன்றைக்குபள்ளிகள்சிறைச்சாலைகளாக இருப்பதால்!சிறைச்சாலைகள்பள்ளிகளாக இருக்கின்றன!எல்லாக் குறுக்கு வழிகளும்நேர்வழிகளை விடநீளமானது!என்பதை உணர்த்தும் வரைசட்டம் தன் கடமையைசெய்துகொண்டே இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com