இயற்றியவனையே
ஏமாற்றிய பெருமைக்குரியது
சட்டம்.
மக்களுக்கானது அல்ல
மக்களுக்கான சட்டம்.
சட்டத்திற்கு
மனசாட்சி இல்லை.
சாட்சிகள் தேவை.
வழக்குரைஞர்களின்
வாதங்களுக்குப் பின்னும்
இருட்டாகவே இருக்கிறது
சட்டம்.
அரசியல்வாதிகளும்
ஆட்சியளர்களும்
தப்பித்துக் கொள்ள
சட்டத்தில் ஓட்டைகள்.
சட்டம்
தன் கடமையை
ஆற்ற விடுவதே இல்லை
அரசியல்.
நிரந்தர தீர்வுக்கு
திட்டமிடாத அரசு
அவ்வபோது பிறப்பிக்கிறது
அவசர சிகிச்சைப் போல
அவசர சட்டம்.
சிலருக்கு சாதகமாகவும்
பலருக்கு பாதகமாகவும்
இருக்கிறது சட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.