விடுதலை: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

Updated on
1 min read
அந்நியர்களிடமிருந்து விடுதலை
பெற்றோம் அன்று போராடி
நம்மவர்களிடமே விடுதலை பெற
போராட வேண்டியுள்ளது இன்று.
கொள்கையற்ற அரசியல்வாவாதி
கொள்ளை அடிக்கும் ஊழல்வாதி
இயற்கையை அழிக்கும் எத்தர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
கல்வியை காசக்கும் கல்வித்தந்தைகள்
மனச்சாட்சியற்ற மருத்துவர்கள்
பெண்ணைப் பாழாக்கும் காமுகர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
யாரையும் நீ நம்பி விடாதே
உன் விடுதலை உன் கையில் தான்
படிப்பு மட்டுமே உன்னை விடுதலையாக்கும்
அதற்கு கல்வி மட்டுமே தீர்வாகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com