விடுதலை: பொன். குமார்

Updated on
1 min read

விடுதலைப் பெற்ற நாட்டில்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
பலவற்றிலிருந்து 
மக்களுக்குத் தேவைப் படுகிறது
விடுதலை.

வறுமைப் பிடியிலிருந்து
விடுதலைப் பெற வழியின்றி
வாடிக் கொண்டிருக்கிறார்கள்
பல கோடியர்.

அலுவல் பிடியிலிருந்து
அனேகருக்குத் தேவை
விடுதலை.

பசியிலிருந்து
மக்களுக்கு எப்போதும்
கிடைப்பதில்லை
விடுதலை.

விடுதலை நாளில் கூட
மக்களிடம் இருப்பதில்லை
விடுதலை உணர்வு.

அன்னியரிடமிருந்து
விடுதலைப் பெற்றிருந்தாலும்
அடிமைப் படுத்தியே 
மக்களை வைத்துள்ளார்கள்
அரசியல்வாதிகள்.

ஆங்கிலேயரைப் போலவே
ஆட்சியாளர்களும்
ஜனநாயகப் போர்வையில்
அதிகார ஆட்சிச் செய்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com