விடுதலை: முத்துலெட்சுமி

Updated on
1 min read

விடுதலை விடுதலை விடுதலை

எந்திர வாழ்க்கைக்கு
இன்றொருநாள் விடுதலை

பட்டமாய் வானில்
பறந்து சிறகடிக்கும்
சிறுவர்கள்…!

கடற்கரை மணலில்
கடலை கொரிக்கும்
காதல் ஜோடிகள்…!

நீண்ட நாள் பிரிந்து சேர்ந்த
நண்பர்களின் கூட்டம்…!

கவிதை
எழுதத் தூண்டும்
வனப்பு…!

ஈரக்காற்றில்
மேனியின் சிலிர்ப்பு..!

இவையெல்லாமே
இயற்கையின் சிறப்பு…!!

கிழக்கே உதிக்கும் ஞாயிறால்
உலகிற்கு வெளிச்சம்!

வாரக்கணக்கில் உதிக்கும் ஞாயிறால்
மனதிற்கு வெளிச்சம்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com