கூட்டிலே அடைபட்டு
குறுகிய எண்ணத்தை
மனதிலே வளர்த்து
தனக்கான அடையாளத்தை
இழந்து விட்டு
தன்னுடைய பண்புகளை
மறந்து விட்டு
கூண்டொன்றே வாழ்வென்று
நினைத்துக் கொண்டு
வாழ்ந்திருக்கும்
பறவை போல
நாட்டிலும் சிலருள்ளார்
தனக்கான வாழ்வதனை
பிறர் வகுக்கக் கொடுப்பார்
அவர் சிறகிருந்தும்
பறக்கப் பயப்படும்
பறவையாய் உள்ளார்
கூட்டைத் திறந்து விட்டாலும்
உலகறியா பறவையது
வெளிச் செல்ல பயப்படும்
அது தன் குணத்தை இழந்திடும்
குணம் மறந்து
வாழும் மனிதா
நமக்கான வாழ்வதனை
கொள்கையாய் நாம் வகுத்து
கட்டுண்டு வாழ்வதே
விடுதலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.