விடுதலை:  -பெருமழை விஜய்

Updated on
1 min read
காசு பண ஆசையின்றி...
காமராஜர் வழியில்...
ஆட்சியாளர் நடந்திட்டால்...
அன்றைக்குத் தான் விடுதலை
தமிழ் நாட்டுக்கு!
விசாரிக்க ஆறு மாதம்...
விறு விறுப்பாய் தீர்ப்பெழுத ஆறு மாதமென்று
அத்தனை கோர்ட்டுகளும் 
அவசரமாய்ச் செயல்பட்டால்
இந்திய நாட்டுக்கே
ஏகமாய் விடுதலை!
'கடைசி நாள் சம்பளமன்றி...
காலணாவும் நடுவில்...
லஞ்சமாய்ப் பெறமாட்டேன்!'என்று
பணியாளர்கள் அனைவரும் 
பகரும் நாளன்றோ...
உலகின் உண்மையான விடுதலை நாள்!
'காசு தரும் எவருக்கும்
கட்டாயமாய் வாக்கில்லை!'
என்றே வாக்காளர் எல்லாரும்
ஏகமனதாய் முடிவெடுத்தால்
அன்றைக்கே நல்விடுதலை
அகில உலகிற்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com