பிறந்த குழந்தைக்கு
இருட்டிலிருந்து விடுதலை..
பிறவிக் குருடனுக்கு
வெளிச்சத்திலிருந்து விடுதலை..
உணவு கிடைத்தவனுக்கு
பசியிலிருந்து விடுதலை..
உறவுகள் கிடைத்தவனுக்கு
பயத்திலிருந்து விடுதலை..
வார இறுதியில்
வேலையிலிருந்து விடுதலை..
வயது முதிர்வதற்குள் திருமணம் செய்தால்
வதந்தியிலிருந்து விடுதலை..
கல்லூரி இறுதியில்
கற்றலுக்கு விடுதலை..
காதலில் விழுகையில்
கனவுகளுக்கு விடுதலை..
மனைவி ஊர் சென்றால்
கணவனுக்கு விடுதலை..
மருமகள் வீடு வந்தால்
மாமியாருக்கு விடுதலை..
உறக்கத்தில் இருப்பவனுக்கு
உண்மை நிலையிலிருந்து விடுதலை..
உயிர் பிரியும் தருணத்தில்
உலகிலிருந்தே விடுதலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.