வீர மங்கை: லட்சுமிபாலா

Updated on
1 min read

கணவனுக்காக போராடினாள் கண்ணகி
மண்ணுக்காக போராடினாள் மங்கம்மா
நாட்டுக்காக போராடினாள் ஜான்சிராணி
பயிர்காக்க போராடினாள் சின்னக்கண்ணு

நித்தம் நித்தம் வாழ்க்கை போராட்டம் இங்கே
குடிகார கணவன்களுடன் மனைவிகள்
அலுவலக சில்மிஷமன்மதன்களுடன்
சிறுபிள்ளையை துகலுரிக்கும் துச்சாதனுடன்
கண்களால் கற்பழிக்கும் கனவான்களுடன்

பாவையை சீரழிக்கும் காமுகன்களுடன்
மங்கையே திரும்ப திரும்ப உயிர்தெழும்
பினிக்ஸ்பறவையாய் இரு
மானம்காக்கவாவது நீ வீரமங்கையாக
இங்கே நீ இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com