வெற்றி ஒன்றையே
கிட்டும் வரை போராடி
ஈட்டி வந்த ஒரு வீரமங்கை,
முதன் முறையாய்
எமனிடம் மட்டுமே
தோற்றுப் போனார்..
அதுவும் அந்த எமனே களைத்துப்
போகும் வரை போராடி ..!
உனதந்த தோல்விக்காய்
துக்கம் அனுஷ்டித்தது,
மொத்த தேசமும்..கண்ணீருடன்..!
ஆனாலும், கட்சிக்கும் ஆட்சிக்கும்
முகமாகவும் முகவரியாகவும்
இருந்த உனது
வாழ்வைப் போலவே சாவுமா
அவிழ்க்க முடியாத
ஐயங்களும் மர்மங்களும் நிறைந்ததாய்
அமைந்து போக வேண்டும்..?
எப்படியோ.அந்த சந்தனப் பேழைக்குள்
ஒரு சகாப்தத்தோடு,
அத்தனை சர்ச்சைளுக்கும்
சேர்த்தே ஆணி அறைந்தாயிற்று..!?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.