வீர மங்கை: -பெருமழை விஜய்,

Updated on
1 min read

இன்றைய நிலையில்...
தொண்ணூற்றேழு அகவையில்...
வீர நடை போடும் வீர மங்கை
ஞானம்மா
வன்றி  வேறு யார்?!

வீரம் என்பது ...
விவேகமும் துணிவும்
இரண்டறக் கலந்து
ஒன்றாய் வெளிப் படுவது!

நன்றாய் வாழ
நலமுடன் செயல்படுவது!
நாட்டு நலனில் 
அக்கறை கொள்வது!
அத்தனை தகுதிகளும் 
உனக்கு இருப்பதனால்
நீயே நாட்டின் வீரமங்கை!

வீழ்ந்து கிடந்த பெண்ணினம்...
இன்று  வீறு  கொண்டெழ 
செய்த காரணத்தால்...
போதி மர நிழல் பெண் புத்தன்
நீதான் என்றால் மிகையாகாது!

நூற்றியிருபது ஆண்டுகள் வாழ்ந்து
வரலாற்றில் நீ...
இடம் பெற வேண்டும்!

யோகா என்ற 
வாழ்நெறி மூலம்
வையகம் நன்றாய்
தழைத்திட வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com