நிழலைத்தேடி: மீனாள் தேவராஜன்

Updated on
1 min read

மாசிப்பனியும் போயிற்று
மரங்களில் துளிர்களும் வந்திடுச்சு
மன்மத வசந்தம் மலர்ந்திடுச்சு
தென்றல் காற்றும் வீசிடுச்சு
கோடை வெயில்  கொளுத்திடவே
நிழல்கள் குளுமை தந்திடவே
குயில்கள் மரங்களில் குந்திடும்
குருவிகள் கிளைகளில் கூச்சலிடும்
குரங்குகள் கிளைகளில் ஊஞ்சலாடும்
கூடிக் கும்மாளம் இடும்
மனிதர் மட்டும் விதிவிலக்கா
மரநிழல்களைத் தேடிப் படுப்பர்
வீடுகளில் விசிறிகள் இல்லை
வேண்டிய காற்று இல்லை
இயற்கை அன்னை எமக்களித்த
இலைகள் நிறைந்த மரமளிக்கும்
கோடைகால நிழலே சுகம்,சுகம்
ஓட்டைகள் நிறைநிழலே சுகம் சுகம்
மரங்கள் இயற்கை அளித்த வரங்கள்
மறந்தும் வெட்டாதீர் வேண்டுதல் விடுகிறேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com