நிழலை தேடி: வெங்கடேஷ் 

Updated on
1 min read

வெயிலில் வருந்தியவர்கள்  நிழலை தேடி,
கற்பனை கண்டவர்களெல்லாம் நிஜங்களை தேடி, 
உறவுகளை உணர்ந்தவர்களெல்லாம் ஒற்றுமை தேடி, 
செலவு செய்பவர்கள் செல்வத்தைத்தேடி,
துன்பத்தில் துவண்டவரெல்லாம் தூக்கம் தேடி,
உழைத்து களைத்தவர்களெல்லாம் ஓய்வு தேடி,
உண்மையில் உறைந்தவர்களெல்லாம்   உன்னதம்   தேடி, 
பொய்மையில் பொசுங்கியவர்கள் வீழ்வைத்தேடி, 
புகழில் புழுக்கம் அடைந்தவர்கள் உண்மை தேடி,
அனைத்தும் கடந்தவர்கள் அமைதி தேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com