நிழல் தேடி: பொன். குமார்

Updated on
1 min read

நிழல் என்பது
நிரந்தரமற்றது.
நிஜமற்றது.

நேரத்துக்கு ஏற்ற மாதிரி
உருவம் மாறி விடும்
நிழல்.

நிழலாக தொடர்ந்தாலும்
நிஜமாக முடியாது.

நிழலை நம்பி ஏமாந்த
நிஜங்களாக உள்ளனர்
நாட்டு மக்கள்.

நிஜத்தையே தொலைத்து
நிழல்களைத் தேடுபவர்களாகவும்
நிறையபேர் நடமாடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com