ஆறோடும் நீரோடும்; ரா.பிரசன்னா

Updated on
1 min read

உறவாடும் ஒற்றைப் பறவையின் 
ஈரமான சிறகுகளில் இன்னும்
அடங்கவில்லை பரபரப்பு

அது கடந்து வந்த பாதையில்
சோலை ஒன்று பாலையாகி இருந்தது.
மணல் கொள்ளையர் போல் 
காகம் ஒன்று பள்ளத்தில் 
கல் வீசிக் கொண்டிருந்தது.

லாரிகளின் நீரோடையில் 
ஏனோ மர நிழல்கள் இல்லை
விழிப்பிற்கு முந்தைய 
நல் கனவாய் 
வந்து சேர்ந்த 
இந்த ஆறோடும்
இந்த நீரோடும்

விடிய விரும்பா  இரவாய் 
முங்கிக் குளிக்கும்
அந்த ஏகாந்தப் பறவையின்
சிறகுகள் வடிக்கும் நீரில்
முழுமை கொள்கிறது 
இந்தக் கவிதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com